திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல் 0
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; திருகோணமலை ஸாஹிரா