ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் 0
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த அகிலவிராஜ் காரியவசம், சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.