“உயிருள்ள சில தலைவர்களை விடவும், ஒரு சில பொம்மைகள் ஆற்றல் மிக்கவை”: வேதாந்தி சேகு இஸ்ஸதீன் 0
– நேர்கண்டர் – யூ.எல். மப்றூக் – (‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீன் இன்று (28) மரணித்து விட்டார். அவரை 2009ஆம் ஆண்டு ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக ஊடகவியலாளர் மப்றூக் பேட்டி கண்டிருந்தார். அதனை இங்கு மீள்பதிவு செய்கிறோம்) பழைய காலத்து மன்னர்களும், மந்திரிகளும் வாழ்ந்ததாக நாம் கேள்விப்பட்ட கோட்டை போல் இருக்கிறது – அந்த மலை