ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும், இதன்போது ஜேர்மன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.