வாக்குச் சாவடி ஊடாக கொரோனா தொற்று பரவாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி 0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் ஊடாக, கொரோனா தொற்று பரவாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உறுதியளித்தார். வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும் போது, கொரோனா பரவல் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் இதனைத்