பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது 0
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும். அதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.