கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை 0
வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று (20) உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.