வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா 0
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களையும் இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.