சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம் 0
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் – செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.