ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து 0
– பாறுக் ஷிஹான் – நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.