“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல் 0
– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய