தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள் 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும்