வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில், தென்கிழக்குப் பல்லைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் 0
வட மாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென வலியுறுத்தி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை புதன்கிழமை, கவன ஈர்ப்பு ஒன்றுகூடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பல்கலைக்கழ முன்றலில் இடம்பெறும் இந்த ஒன்றுகூடலை, தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.