பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது 0
பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பணத் தாள்களே பிரதான காரணமாக இருந்தன என்று விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது. பேலியகொட உப-கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. தற்போது அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது. சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.