நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மரணம் 0
தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று (08) காலமானார். அவருக்கு 57 வயதாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ். ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.