மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து 0
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்புத் தடை எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும், அதுதான் பூகோள அரசியல் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.