மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0
– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.