புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு 0
புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினார். புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று புகையிரத போக்குவரத்துகள் குறைவாகவே இருந்தன.