புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது 0
புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. 5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் திங்கட்கிழமை தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.