பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம் 0
– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார். ஏறாவூர் – மீராகேணியை வதிவிடமாக கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.