அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின்