பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் 0
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணியும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.