பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் 0
பாகிஸ்தான் – சியல்கோட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த பிரியந்த குமார தியவதனவின் உடல் இன்று (08) அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரியந்தவின் உடலுக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரின் இல்லத்தில் இன்று பிரசன்னமாகியிருந்தனர்.