ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம் 0
– க. கிஷாந்தன் – மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றினை உருவாக்கியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.