சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள் 0
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.