காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0
– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ் கோரிக்கை விடுத்தார்.