கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி 0
கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க – மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு இன்று ஆளுநர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.