பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு 0
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தற்போது நிர்வாக பதவிகளை வகிக்கின்றனர். அல்லது ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.