மஹிந்தவின் சகோதரி மகன் தேர்தலில் போட்டி: ‘மொட்டு’ முக்கியஸ்தர்கள் அதிருப்தி 0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி ராஜபக்ஷவின் மகன் நிபுண ரணவக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். இருந்தபோதும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது டலஸ் அலகப்பெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.