‘டிமிக்கி’ கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0
நாடாளுமன்ற உறுப்பினர்களக்கான மாதிவெலயில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அனுமதியின்றி தங்கியிருந்தமைக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறியதற்காக, 08 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர். இந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என நாடாளுமன்ற நிர்வாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யத் தவறியமைக்காக விதிக்கப்பட்ட