சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.