‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு 0
கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என, பிரதமரின் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்ததாக ‘த லீடர்’ செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என,