ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிறு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னரான நாளொன்றில் இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும்