வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0
லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.