திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம் 0
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் – நாடாளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்கும் செயல் என, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.