மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.