தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் 0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது