விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே