முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம் 0
– மரைக்கார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தை விடவும், தேசிய மக்கள் சக்திக்கும் அனுரவுக்கும் ‘குடை’ பிடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கே பாரிய ‘செருப்படி’யாக அமைந்திருக்கிறது. இந்த அவமானத்தை சமாளிக்கும் வகையிலான கருத்துக்களையும் கதைகளையும் கூறிவரும் – தேசிய மக்கள் சக்திக்கு ‘குடை’ பிடிக்கும்