மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார் 0
இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மல்லிகை எனும் இலக்கிய சஞ்சிகையை மிக நீண்ட காலமாக நடத்தி வந்தமையினால், ‘மல்லிகை ஜீவா’ எனவும் இவர் அறியப்படுவார். மல்லிகை சஞ்சிகையை 1966ஆம் ஆண்டு தொடக்கம் பல தசாப்தங்களாக தனியாளாய் இவர் நடத்தி வந்தார். யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட