மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் 0
மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டொக்டர் அசேல குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.