நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம் 0
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப்