ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர் 0
– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) – கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப். காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை