நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.