இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை