சேனல் 4 ஆவணப்பட விவகாரம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம் 0
சேனல் 4 ஆவணப்படம் ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை – கொழும்பு பேராயர் இல்லம் கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல், அதனை உடனடியாக நிராகரிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என, கொழும்பு பேராயர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார்.