பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா? 0
புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன. அதன்படி, பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வோக்கி-டோக்கி ரக கருவி மூலம் முறைகேடு தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்க முடியும்.