சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை 0
– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நெருப்பு உஷ்ணத்தில் எனக்கு நினைவு திரும்பியது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்போது மகன் கதவருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தடவைகள் தலையை தூக்கினான்.