நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம் 0
சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம், ‘நெய் மங்கோல்’ எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் பயன்படுத்துகிறது. விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக்