சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம் 0
இன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுவோருக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் சிறுபான்மை சமூகங்களை இலக்குவைக்கும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.